பட புரமோஷனுக்கு ஏன் மற்ற சமூக இயக்குனர்களை கூப்பிடுகிறீர்கள்?!.. விளாசும் இயக்குனர்!..

by சிவா |
mari
X

#image_title

mari selvaraj: தமிழ் திரையுலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவர்கள் கடந்து வந்த பிரச்சனைகளை, அவர்கள் வாழ்வில் இருக்கும் சிக்கல்களை திரைப்படமாக எடுத்து வருபவர்கள் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ். அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் புத்தரை கடவுளாக வணங்குபவர்.

அதன்பின் மெட்ராஸ், கபாலி, காலா என அடித்து ஆடினார். தலித் மக்களின் உரிமை பற்றி இவரின் படங்கள் பேசும். அடித்தட்டு மக்களுக்கு நிலம் மீது இருக்கும் உரிமையை காலா படத்தில் சொல்லி இருப்பார். மெட்ராஸ் படத்தில் வட சென்னை மக்களிடையே நிலவும் அரசியலை அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.

இதையும் படிங்க: விஜய் கட்சி பாடலை விவேக் எழுதக் காரணம் .. இத்தனை விஷயங்கள் இருக்கா?

இப்போது அவரின் இயக்கத்தில் வெளிவந்துள்ள தங்கலான் திரைப்படத்திலும் 200 வருடங்களுக்கு முன் தாழ்த்தப்பட்ட மக்களை வெள்ளைக்காரர்கள் எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை தங்க வயலோடு தொடர்பு படுத்தி திரைக்கதையாக அமைத்திருந்தார். ஒருபக்கம், பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் பொட்டில் அறைவது போல கதை சொன்னார் மாரி செல்வராஜ்.

அவர் இயக்கிய கர்ணன் திரைப்படமும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனையை பேசியது. அவர் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. அந்த படத்தில் சிறு வயதில் தான் சந்தித்த பிரச்சனைகள் பற்றி பேசியிருக்கிறார். இந்த படம் பலரையும் அழ வைத்திருக்கிறது. மேலும், மணிரத்னம், மிஷ்கின், வெற்றிமாறன், பாலா போன்ற மிகச்சிறந்த இயக்குனர்களும் இப்படத்தை பாரட்டி பேசியுள்ளனர்.

இதையும் படிங்க: பரியேறும்பெருமாள் ரிலீசுக்குப் பிறகு மாரி செல்வராஜ் செய்த தரமான சம்பவம்… அப்படி ஒரு கஷ்டகாலமாம்!

இந்நிலையில், ஜோடி பட இயக்குனர் பிரவீன் காந்தி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘உங்கள் படங்களில் மற்றவர்களை ‘திருப்பி அடி’ என சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் படத்தின் புரமோஷனுக்கு மட்டும் ஏன் மற்ற சமூகத்தை சேர்ந்த இயக்குனர்களையும், நடிகர்களையும் கூப்பிடுகிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார்.

praveen

praveen

மேலும் ‘புத்தர் என்றால் அன்பு, கருணைதான். திருப்பி அடிப்பதல்ல.. பேட்டிகளில் ரஞ்சித் ஏன் கால் மேல் கால் போட்டு அமர்கிறார்?. இதுதான் ஆதிக்க மனநிலை’ என சொல்லி இருக்கிறார். ஏற்கனவே ‘சினிமாவில் ஆபாசம் மற்றும் ஜாதி தொடர்பான படங்கள் அதிகரித்ததற்கு காரனமே தனுஷ் குடும்பம்தான்’ என பிரவீன் காந்தி சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story