தங்கம்னு நினைச்சா அது செங்கலாயிருச்சு! தங்காலனை பங்கம் செய்த இயக்குனர்

Thangalan movie: விக்ரம் நடிப்பில் கடந்த 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ,மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்று வந்தாலும் படம் தொடங்கியதில் இருந்தே இதைப் பற்றி பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி அவருடைய விமர்சனத்தை முன்வைத்துக் கொண்டே வருகிறார்.

சமீபத்தில் கூட தங்கலான் படத்தை நான் பார்க்கவே மாட்டேன் என்றும் அது அழுக்கு நிறைந்த படம் என்றும் கூறி படு மோசமாக விமர்சித்திருந்தார். இப்போது கூட தங்கம்னு நினைச்சா அது செங்கல் ஆயிருச்சு என்றும் கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு ஆரம்பித்த மூன்றாவது நாளிலேயே இந்த படம் ஓடாது என விக்ரமுக்கு நன்றாகவே தெரியும் என்றும் பிரவீன் காந்தி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கொட்டுக்காளி விழாவில் மிஷ்கின் வேணும்னே பேசினாரா? எதுக்கு இந்த அலப்பறை?

இது முழுக்க முழுக்க பா ரஞ்சித் மீது பிரவீன் காந்தி வைக்கும் குற்றச்சாட்டாகவே பார்க்கப்படுகிறது. ஒரு வெள்ளைக்காரனை வில்லனாகவும் ஒரு சாதாரண மக்களை அடுத்த நிலையாகவும் வைத்து படத்தை எடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலாதிக்கத்திற்கும் கீழாதிக்கத்திற்கும் இடையில் இருக்கும் பிரச்சினை என்ற வகையில்தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார் பா ரஞ்சித்.

அவர் இயக்குனராக இருப்பதற்கு பதிலாக ஒரு அகழ்வாராய்ச்சியை செய்ய போகலாம் என பிரவீன் காந்தி கூறியிருக்கிறார்.ஏனெனில் ஜாதி அரசியல் பற்றி ஒவ்வொரு படத்திலும் புது புது முறைகளை புகுத்திக் கொண்டே வருவதால்தான் பிரவீன் காந்தி இப்படி கூறுகிறார். ஆரம்ப காலத்தில் பார்க்கும் போது வெள்ளைக்காரன் வந்து தான் தமிழர்களை இந்த நிலைக்கு பிரித்தான்.

இதையும் படிங்க; ஒன்றரை வருடங்களுக்கு முன்பே ப்ரீ புக்கிங் செய்து காரை வாங்கிய விஜய்! ஏன்னு தெரியுமா?

அதை விட்டு பா ரஞ்சித் இன்று வரை தமிழர்களுக்குள் தான் இந்த மாதிரி பாகுபாடு ஏற்படுகிறது. அவர்கள் தான் விளிம்பு நிலை மக்களை படுமோசமாக நடத்தி வருகிறார்கள் என்ற வகையில் படங்களை எடுத்து வருகிறார். அது முழுக்க முழுக்க தவறு. ஆரியர்கள் இஸ்லாமியர்கள் இவர்கள்தான் வெள்ளைக்காரனை தன்னோடு வைத்துக்கொண்டு அவர்கள் வந்த பிறகுதான் பிரித்தார்கள்.

பிராமணர்களை வெள்ளைக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அவர்கள்தான் இந்த பிரிவினைக்கு காரணம் என்றும் பிரவீன் காந்தி கூறினார். மேலும் டீக்கடையில் கண்ணாடி டம்ளர் பேப்பர் கப் என்ற வகையில் மக்களை பிரித்து பார்க்கிறார்கள் என பா ரஞ்சித்து சமீபத்தில் கூறியிருப்பது புதிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது .

praveen

praveen

இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் -8ல் களமிறங்கும் காதல் மன்னன்! தாங்குமா வீடு? இதுல பெருமை வேற

பேப்பர் கப் கண்ணாடி டம்ளர் என குடிப்பது அவர்களது தனி விருப்பமாகும். இதையும் பாகுபாடு என கருதி பா ரஞ்சித் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என பிரவீன் காந்தி கூறினார். மேலும் முதல் நாளில் இந்த அளவுக்கு படத்தை எதிர்மறையாக பேசப்படுவது இந்த ஒரு படத்தில் தான். படம் அந்த அளவு வெற்றி பெறவில்லை என்றும் பிரவீன் காந்தி கூறியிருக்கிறார். ஒருவேளை படம் ஓடுகிறது என்று சொன்னால் அது பா ரஞ்சித் வீட்டில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது போல என கிண்டலாகவும் பிரவீன் காந்தி பேசி இருக்கிறார்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it