‘குட் பேட் அக்லி’ டயலாக்கில் இப்படி ஒரு கரெக்ஷனா? இவர ரைட்டரா போடுங்கப்பா

good
Good Bad Ugly: அஜித் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. வரும் பத்தாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைத்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, தெலுங்கு நடிகர் சுனில் என பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
படத்தின் டீசர் பாடல் எல்லாம் வெளியாகி ரசிகர்களை கூஸ் பம்பில் வைத்திருக்கிறது. படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிக்கெட்டுக்கான முன்பதிவு 4ம் தேதியிலிருந்து தொடங்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக இருக்கப் போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்த நிலையில் படத்தை பற்றி பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். நீண்ட நாளைக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கான படமாக இந்த குட் பேட் அக்லி திரைப்படம் அமையப்போகிறது. களத்தில் இறங்கி விட்டார் அமர்க்களம் அஜித் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மிகவும் இளமையான தோற்றத்துடன் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
அஜித் படங்களை பொறுத்த வரைக்கும் குறிப்பாக அவருடைய வெற்றி படங்களை எடுத்துக் கொண்டால் அவருக்கு ஏற்பட்ட வலிகளை வசனங்கள் மூலமாக சொல்லி இருப்பார். அப்படி தன்னுடைய பேஸ் வாய்ஸில் இந்த படத்திலும் சில வசனங்களை கூறியிருக்கிறார். குறிப்பாக என்னதான் குட்டாக இருந்தாலும் இந்த உலகம் நம்மை பேடாகத்தான் பார்க்க விரும்புகிறது என கூறியிருப்பார்.

ஆனால் அதில் இன்னொரு டயலாக்கையும் சேர்த்து இருக்கலாம் .என்னதான் குட்டாக இருந்தாலும் இந்த உலகம் நம்மை பேடாகத்தான் பார்க்க விரும்புகிறது. அதனால் தான் அக்லியாக மாறி அழிக்கப வந்திருக்கிறேன் என்ற ஒரு வசனத்தையும் வைத்திருந்தால் இன்னும் வேற லெவலில் இருந்திருக்கும் படம். ஆனால் ஏதோ ஒரு சம்பவம் பண்ண போகிறது. விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கான படமே கிடையாது. ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாகத்தான் இருக்கப் போகிறது. ஒவ்வொரு ஃப்ரேமுமே ரசிகர்கள் கொண்டாட போகிறார்கள் என்று பிரவீன் காந்தி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.