விஜயகாந்துக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியும்!.. சரி செய்ய முடியாது!.. இயக்குனர் அதிர்ச்சி பேட்டி!…
தமிழ் சினிமாவில் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த ஒரு நடிகர் எனில் அது விஜயகாந்த் மட்டுமே. ரஜினி, கமல் ரசிகர்களுக்கு கூட விஜயகாந்தை பிடிக்கும். ஏனெனில் அவரின் படங்களும் சரி, நிஜ வாழ்வில் அவரின் நல்ல குணமும் சரி எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் வளர்ந்தவர் இவர்.
ஆக்ஷன் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். சரியாக பேச முடியாமல், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணர்ந்து கொள்ள முடியாமல் அவர் இருக்கிறார். உண்மையிலேயே அப்படி அவரின் உடலில் என்னதான் பிரச்சனை என்பது பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருக்கிறது. அவர் மீண்டும் பழைய விஜயகாந்தாக மீண்டு வரவேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.
விஜயகாந்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்தான். இருவரும் ஒன்றாகவே சினிமாவில் சாதிக்க மதுரையிலிருந்து சென்னை வந்தார்கள். விஜயகாந்த் வளர துவங்கிய போது அவருடன் இருந்து அவர் என்ன மாதிரியான திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்தவர் ராவுத்தர்தான். மேலும், விஜயகாந்தின் எதிர்காலம் குறித்தும், அவரின் அரசியல் வாழ்க்கை குறித்தும் அப்போதே யோசித்து படிப்படியாக விஜயகாந்தை வளர்த்தவர் அவர். திரையுலகில் விஜயகாந்த் - ராவுத்தர் போன்ற நட்பை அதற்கும் முன்பும் சரி, பின்பும் சரி பார்க்கவே முடியாது. ஆனால், திருமணத்திற்கு பின் விஜயகாந்தும், ராவுத்தரும் பிரிந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் பிரவீன் காந்தி ‘இப்ராஹிம் ராவுத்தர் இருக்கும்வரைதான் விஜயகாந்த் ஆக்டிவாக இருந்தார். ராவுத்தர் இறந்தபோது விஜயகாந்த் நிலை குலைந்துவிட்டார். ராவுத்தரின் இறுதிநாட்களில் அவருடன் விஜயகாந்த் இல்லை. அதனால்தான் ராவுத்தர் நம்மை விட்டு சென்றுவிட்டானோ என விஜயகாந்த் குழம்பி போனார். தனக்காகவே தன் வாழ்வை தியாகம் செய்த ராவுத்தரின் மரணம் விஜயகாந்தை மிகவும் பாதித்தது. அந்த குற்ற உணர்ச்சிதான் விஜயகாந்தை நோயாளியாக மாற்றியது. அந்த குற்ற உணர்ச்சி அவரின் ஆழ்மனதில் போய் உட்காந்து கொண்டது. இதை நான் அருகிலிருந்து பார்த்தேன்.
ராவுத்தரை பிரிந்த வலி இப்போதும் விஜயகாந்துக்கு இருக்கிறது. அதனால்தான் அவரால் ஆக்டிவாக செயல்பட முடியவிலை. நாம் அருகில் இருந்திருந்தால், அவனை பிரியாமல் இருந்திருந்தால் ராவுத்தர் இறந்திருக்க மாட்டான். நாம்தான் அவனை கொன்றுவிட்டோம் என விஜயகாந்த் நம்புகிறார். அதுதான் அவரை புரட்டிப்போட்டுள்ளது. இந்த குற்ற உணர்ச்சி இருக்கும்வரை விஜயகாந்த் மீளவே முடியாது.
அந்த குற்ற உணர்ச்சியை அவரின் மனதில் இருந்து எடுக்க வேண்டும். அதிலிருந்து அவர் மீளவேண்டும். அப்போதுதான் அவர் குணமாவார். இதற்கு ஒன்றுதான் வழி. ராவுத்தர் போல ஒருவரை அழைத்து வந்து அவர் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார் என விஜயகாந்தை நம்ப வைக்க வேண்டும். இதை வெளிநாடுகளில் மனோதத்துவ சிகிச்சையாக செய்வார்கள்’ என பிரவீன் காந்தி பேசியுள்ளார்.