வாரிசு படத்தில் இவ்வளவு கிராபிக்ஸ் பண்ணதுக்கு இதுதான் காரணம்?... ஓப்பனாக போட்டுடைத்த பிரபல  படத்தொகுப்பாளர்…

by Arun Prasad |
Varisu
X

Varisu

கடந்த பொங்கல் தினத்தன்று விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. “வாரிசு” திரைப்படத்தின் நீளம் ரசிகர்களை மிகவும் சோதித்தது என்றே பல விமர்சனங்கள் வெளிவந்தது.

Varisu

Varisu

குறிப்பாக இத்திரைப்படத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அப்பட்டமாக தெரிந்த கிராபிக்ஸ் காட்சிகள்தான். படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 300 கோடிகள் என செய்திகள் வெளிவந்தன. படத்தில் சில காட்சிகளில் அருவிகளை கூட கிராபிக்ஸில் காட்சிப்படுத்தியிருந்தனர். இவ்வளவு கோடி பட்ஜெட் ஒதுக்கும்போது ஏன் ஒரு அருவியை கூட கிராபிக்ஸில் காட்சிப்படுத்த வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் “வாரிசு” திரைப்படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு அங்கே உள்ள பல மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர் “வாரிசு படத்தில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட விஷயம் கிராபிக்ஸ்தான். அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஏன் இவ்வளவு கிராபிக்ஸ் காட்சிகள் என கேள்வி எழுகிறது?” என்று கேள்வி கேட்டிருந்தார்.

Praveen KL

Praveen KL

அதற்கு பதிலளித்த பிரவீன் கே.எல்., “நாற்பது ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்ட ஒரு குடும்பம், எவ்வளவு பெரிய வீட்டில் தங்குவார்கள் என்று அறிய படக்குழுவினர் உலகத்தில் பல பகுதிகளுக்குச் சென்று பார்த்தனர். ஸ்பெயின் நாட்டில் கூட சில காட்சிகளை எடுக்கலாம் என்று பலரும் கூறினார்கள். ஆனால் பிராக்டிகலாக பார்த்தோமானால் அது முடியாத காரியம்.

அதே போல் விஜய் ஒரு பெரிய ஹீரோ. அவரை கொண்டு பொது வெளியில் படமெடுப்பது அவ்வளவு சுலபமில்லை. ஆதலால்தான் பல காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்டன்ட் உதவியாளரை உலகம் அறிந்த நடன இயக்குனராக மாற்றிய ரஜினிகாந்த்… யார்ன்னு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க!…

Next Story