Categories: Entertainment News

அந்த பச்ச மண்ணா இது!.. தூக்கலான கவர்ச்சியில் அதிரவிட்ட அயோத்தி பட நடிகை…

சிறு வயது முதலே நடித்து வருபவர் ப்ரீத்தி அஸ்ராணி. தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். அதிகமாக இவர் நடித்தது தெலுங்கு படங்களில்தான்.

ஏழெட்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மூன்று தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும், சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே சீரியல் தொடரிலும் ப்ரீத்தி நடித்துள்ளார்.

சமீபத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படத்தில் அம்மாவை இழந்து நிற்கும் இளம் பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை அழைத்துவிட்டார்.

இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை ப்ரீத்தி அஸ்ராணி வெளிப்படுத்தியிருந்தார்.

பாஷை தெரியாத ஊரில் யாராவது தங்களுக்கு உதவ மாட்டார்களா என்கிற ஏக்கம், அம்மா மறைந்து போன சோகம் என இரண்டு உணர்வுகளையும் முகத்தில் கடத்தியிருந்தார்.

மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ப்ரீத்தி அஸ்ராணி கவர்ச்சியான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து அவரின் சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், ப்ரீத்தி அஸ்ராணியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா