நல்லவேளை என் பொண்ண கூட்டி வரல!. ஜாலி பர்ச்சஸ் செய்த ப்ரீத்தி சஞ்சீவ்... வீடியோ பாருங்க...
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக வலம் இருப்பவர் சஞ்சீவ். தளபதி விஜய் உடன் படித்த நண்பரான இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்.
இவரது மனைவி பிரீத்தி சஞ்சீவ் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது இவர் சென்னை, தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே இந்த கடையில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது ப்ரீத்தி சஞ்சீவ் ஷாப்பிங் செய்த போது புடவை கலெக்சன், மேக்கப் பொருட்கள், ஆபரணங்கள் என அனைத்தையும் பார்த்து அசந்து போய் உள்ளார். குழந்தைகளின் ஸ்கின் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பான மேக்கப் பொருட்கள் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.
என் பொண்ணு மட்டும் இங்க கூட்டிட்டு வந்தா எல்லாம் மேக்கப் பொருட்களையும் எடுத்துக்குவா எனக்கும் அவளுக்கும் சண்டைதான் வரும் என பேசியுள்ளார். இவரது இந்த ஷாப்பிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.