
Entertainment News
புடவையில நீ பேரழகு!…சீரியல் நடிகையிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா. மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் மேலும் நெருக்கமானார். ஹிந்தியிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல சீரியல்களில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ‘காவியாஞ்சலி’ எனும் ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார்.
சீரியலில் இழுத்தி போர்த்தி நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம். அதாவது, அழகான, சில சமயம் கவர்ச்சியான உடைகளையும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், புடவை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.