கவின் நடித்த ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்த ப்ரீத்தி முகுந்தன் ஒயிட் கலர் டிரான்ஸ்பரென்ட் டாப்ஸ் அணிந்து வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை குதூகலம் அடையச் செய்துள்ளது. சன்டே நைட்டுக்கு சரியான பார்ட்டி தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ப்ரீத்தி முகுந்தன் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த டிராகன் நடிகை கயாடு லோஹர் ப்ரெட்டி (அழகி) என கமெண்ட் போட்டுள்ளார். ஏகப்பட்ட ரசிகர்களும் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்களில் ஸ்பெஷல் என்னவென்றால் முதல் மூன்று புகைப்படங்கள் பிலிம் ரோலில் எடுக்கப்பட்டது என கேப்ஷன் கொடுத்துள்ளார் ப்ரீத்தி முகுந்தன். அடுத்த மாதம் அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கண்ணப்பா திரைப்படம் வெளியாகிறது.
விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்துள்ள அந்த படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல பிராபளங்கள் நடித்துள்ளனர். ஸ்டார் படத்தை தொடர்ந்து ப்ரீத்தி முகுந்தனுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அதர்வா முரளி நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படத்தில் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். அந்த பிரெண்ட்ஷிப் பாண்டிங் தான் ப்ரீத்தி முகுந்தன் போட்டோ போட்டதும் அவர் அப்படி கமெண்ட் போட காரணம்.
23 வயதாகும் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஆரம்பத்தில் டிஜே அருணாச்சலம் நடித்து வெளியிட்ட ஆல்பம் பாடலான முட்டு முட்டு பாடலில் நடித்த பிரபலமானார். அதன் பின்னர் சாய் அபயங்கர் இசையில் வெளியான ஆசை கூட பாடலிலும் இவர் தான் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி மைனே பியார் கியா எனும் படத்தின் மூலம் மலையாளத்திலும் இந்த ஆண்டு அறிமுகமாக உள்ளார்.