ஷூட்டிங் முடிஞ்சி மிட் நைட் வந்தாலும் கேப்டன் அதை செய்யாம தூங்க மாட்டார்!.. பிரேமலதா சொன்ன சீக்ரெட்!..

by சிவா |
premalatha
X

Vijayakanth: நடிகர் விஜயகாந்துக்கு சினிமாவில் நடிப்பதுதான் ஆசை என்றாலும் தான் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இருக்கவேண்டும், தனது திரைப்படங்களில் இடம் பெறும் சண்டை காட்சிகள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் விருப்பம் உடையவர். அதனால், அவரின் சண்டை காட்சிகளை ரசிகர்கள் அவ்வளவு ரசித்தார்கள்.

சில படங்களுக்கு ஒரு வாரம் தொடர்ந்து சண்டை காட்சிகளில் நடிப்பார். அதற்காக பல கஷ்டங்களையும் படுவார். இதனால், அவரின் தோள்பட்டை கூட கீழே இறங்கிவிடுமாம். ஆனால், கையாலே அதை தூக்கி நிறுத்திவிட்டு மீண்டும் அதே சண்டைக்காட்சியில் நடிப்பாராம்.

இதையும் படிங்க: வயசான மாதிரி இருக்கும்! விஜயகாந்த் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த நடிகை யார் தெரியுமா?

எம்.ஜி.ஆரை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தார் விஜயகாந்த். எம்.ஜி.ஆரின் படங்களில் இடம் பெற்றும் பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. சமீபத்தில் விஜயகாந்த் மரணமடைந்தார். அதன்பின்னரும் அவருக்கு அஞ்சலி செலுத்த இப்போதும் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

vijayakanth

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவரின் மனைவி பிரேமலதா ‘எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக பாடல் காட்சிகளை அப்படி ரசிப்பார். வீட்டில் இருந்தால் நிறைய ஹாலிவுட் படங்களை பார்ப்பார். படப்பிடிப்பு முடிந்து மிட் நைட் வீட்டுக்கு வந்தாலும் ஒரு ஆங்கில படத்தை பார்த்துவிட்டுதான் தூங்குவார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் நடிக்க மறுத்த 15 திரைப்படங்கள்!.. அவருக்கு பதில் நடித்த நடிகர்கள் யார் தெரியுமா?..

அந்த படத்தில் எப்படி சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது என கூர்ந்து கவனிப்பார். அதுபோலவே, அப்போது அவர் நடித்து வரும் படங்களில் சண்டை காட்சிகளை வைப்பார். படப்பிடிப்பு தளங்களில் எல்லோருடனும் அமர்ந்துதான் சாப்பிடுவார். அவர் எங்கு இருந்தாலும் சரி என்னை தொடர்புகொண்டு ‘ஒருவர் வருவார் அவரின் கையில் இவ்வளவு பணம் கொடு’ என்பார்.

எதற்கு என்றெல்லாம் நான் ஒருபோதும் கேட்டதில்லை. அவர் என்ன நினைக்கிறாரே அதை செய்வதுதான் ஒரு மனைவியின் கடமை. அதைத்தான் நான் செய்தேன். இப்போதும் செய்து வருகிறேன். அவர் இருக்கும்போது எல்லோருக்கும் சாப்பாடு போட்டார். அது எப்போதும் தொடரும்’ என பிரேமலதா கூறினார்.

இதையும் படிங்க: இதனாலதான் கேப்டன் ‘தூ’ன்னு துப்பினார்.. விஜயகாந்த் வீட்டிற்கு வரும் அஜித்!. இவரே சொல்லிட்டாரு..

Next Story