இப்படி ஆகும்னு கனவுல கூட நினைக்கல!.. விஜயகாந்தை நினைத்து கண் கலங்கிய பிரேமலதா..

by சிவா |   ( Updated:2023-08-26 03:10:45  )
vijayakanth
X

தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்‌ஷன் நாயகனாக வலம் வந்தவர் விஜயகாந்த். 80களில் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக மாறியவர். 25 வருடங்கள் இவரின் மார்க்கெட்டை யாராலும் அசைக்க முடியவில்லை. ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வந்து சில வருடங்களுக்கு பின் இவர் சி்னிமாவுக்கு வந்தாலும் ஒரு கட்டத்தில் ரஜினி படங்களுக்கே டஃப் கொடுத்த நடிகர் இவர்.

எம்.ஜி.ஆர் பாணியில் துவக்கம் முதலே தவறுகளை தட்டிக்கேட்கும் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்தார். ஒருபக்கம் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பெண் ரசிகைகளையும் பெற்றார். பெண்களுக்கு இவரை பார்த்தால் ‘அண்ணன்’ என்கிற உணர்வு வரும். அதுதான் அவர் ஏற்படுத்திய தாக்கம். அதுதான் அவரின் வெற்றியாக இருந்தது.

இதையும் படிங்க: வெறித்தனமான லுக்கில் விஜயகாந்த் மகன்!.. தெறிக்கவிடும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ..

ரஜினியை விட கிராமபுறங்களில் விஜயகாந்துகு மவுசு அதிகம். ரஜினியை விட அதிக ரசிகர் மன்றங்களை வைத்திருந்தவர் விஜயகாந்த். அதனால்தான் அரசியல் கட்சி துவங்கியபோது அவரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கே கட்சியில் பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுத்தார்.

கடந்த 8 வருடங்களாகவே விஜயகாந்த் ஆக்டிவாக இல்லை. அவரால் சரியாக பேசவோ, நடக்கவோ முடியவில்லை. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணரமுடியாதவராக இருக்கிறார். விஜயகாந்த் ஆக்டிவாக மீண்டும் வர வேண்டும் என அவரின் ரசிகர்களும், தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பாடலை கேட்டு பூரித்து போன விஜயகாந்த்!.. இளையராஜாவுக்கு என்ன செய்தார் தெரியுமா?…

சமீபத்தில் பேட்டி கொடுத்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ‘கேப்டன் உடல் நிலை பின்னடைவு’ என சொல்ல அனைவரும் பதறிவிட்டனர். ஆனால், அவர் நன்றாக இருக்கிறார் என விஜயகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. விஜயகாந்த் நேற்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்தித்து கையசைத்தார்.

மேலும், ஊடகம் ஒன்றில் பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் ‘இவ்வளவு நேசித்த உங்கள் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது எப்படி உணர்ந்தீர்கள்?’ என கேட்டபோது அவர் ‘அப்படியே உடைந்து போனேன். இப்படி ஒருநிலை வரும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அவர் ஆக்டிவாக நடித்து வந்தபோதே அவருக்கு பல நாட்கள் உணவு ஊட்டி விட்டுருக்கிறேன். அவர் அம்மா இல்லாமல் வளர்ந்தவர். எனவே, அவருக்கு ஒரு அம்மாவாக இருந்தேன். அமெரிக்கா, மலேசியா, துபாய் என பல நாட்டுக்கு அழைத்து என்று அவருக்கு சிகிச்சை செய்தேன்’ என கண்ணீர் மல்க பேசியிருந்தார்.

இதையும் படிங்க: வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா

Next Story