என் மகனிடம் விஜய் இப்படி சொல்லுவாருனு நினைக்கல.. பிரேமலதா சொன்ன தகவல்
Premalatha: கடந்த திங்கள் கிழமை அன்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் விஜய், வெங்கட் பிரபு மற்றும் கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் சேர்ந்து விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அங்கு அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன் சண்முக பாண்டியன் ஆகியோர்களை சந்தித்து சில மணி நேரம் உரையாடிவிட்டு சென்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவியது.
ஏனெனில் விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாத போது விஜய் ஒரு முறை கூட வந்து சந்திக்கவில்லை என்பது விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியாக இருந்தது. அதன் பிறகு கேப்டன் இறந்த சமயம் விஜய் அந்த கூட்டத்திற்கு நடுவிலும் வந்து விஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு அழுத காட்சியையும் நம்மால் பார்க்க முடிந்தது.
இதையும் படிங்க: மிச்ச மீதி சாப்பாட்டை ஓசி வாங்கி சாப்பிடுவேன்!.. மாரி செல்வராஜ் சொல்லும் பிளாஷ்பேக்!..
அதிலிருந்து விஜய் மீது விஜயகாந்த் ரசிகர்களுக்கு இருந்த வருத்தம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. அதோடு கோட் திரைப்படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலமாக பயன்படுத்தி நடிக்க வைக்கும் செய்தியும் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது .இந்த ஒரு மரியாதை நிமித்தம் காரணமாகவே விஜயகாந்த் குடும்பத்தாரை கோட் திரைப்பட குழு நேரில் சென்று சந்தித்தார்கள்.
இதைப் பற்றி பிரேமலதா விஜயகாந்த் தற்போது ஒரு பத்திரிக்கையாளர் பேட்டியில் கூறி வருகிறார். அதில் விஜய் எங்களை வந்து சந்தித்தது ஒன்றும் புதிது கிடையாது. நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். இதற்கு முன் சாலிகிராமம் வீட்டு பக்கத்தில் தான் விஜயும் இருந்தார். சிறுவயதிலிருந்தே விஜய் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.
இதையும் படிங்க: கஜினி படத்தினை மிஸ் செய்ததது இத்தனை ஹீரோக்களா? கல்பனா கேரக்டருக்கும் நோ சொன்ன நடிகை…
எங்கள் பிள்ளையாகத்தான் விஜய்யை நான் பார்க்கிறேன் .விஜயகாந்துக்கும் எஸ் ஏ சந்திரசேகருக்கும் உள்ள நட்பு எப்படிப்பட்டது என உங்கள் அனைவருக்குமே தெரியும் .அதனால் அவர் எங்கள் வீட்டிற்கு வந்ததை நான் புதிதாக பார்க்கவில்லை. மேலும் கோட் படத்தில் கேப்டன் நடித்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் வரும் காட்சி பிரமாதமாக வந்திருக்கிறது.
விஜயிடம் என் மகன் சண்முக பாண்டியன் ‘சினிமாவில் நீங்கள் தான் சீனியர். இனிமேல் எங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்’ என கூறினார். அதற்கு விஜய் விஜய பிரபாகரனிடம் ‘அரசியலில் நீதான் எனக்கு சீனியர் .பத்திரிக்கையாளர்களை சந்தித்து நீ பேசும் விதம், பழகும் விதம் பார்க்கவே நன்றாக இருக்கிறது. அதில் ஒரு பக்குவம் தெரிகிறது’ என கூறினார். இப்படி என் மகன்கள் இருவரிடமும் விஜய் ஜாலியாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்து எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது என பிரேமலதா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: மீனாவிடம் சிக்கிய ரோகிணி.. குழம்பி நிற்கும் கோபி… தங்கமயில் செய்த பெரிய விஷயம்..