பிரேமலு பிரபலத்தை வளைத்து போட்ட குட் பேட் அக்லி டீம்… கூடவே இன்னொரு வில்லன் நடிகரும் வராராம்!…

Published on: May 31, 2024
---Advertisement---

GoodBadUgly: அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க இருக்கும் முக்கிய நடிகர்கள் குறித்த ஆசிரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ட்ரெண்ட்டிங் நடிகர்களை படத்தில் இணைக்க படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படம் குட் பேட் அக்லி. இத்திரைப்படத்தில் அஜித்குமார் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். நெகட்டிவ் வேடம் எனக் கூறப்படும் நிலையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் உண்மை கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது.

இதையும் படிங்க: எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத இந்தியன் படத்தின் அந்தக் காட்சி… அடுத்தடுத்த பாகத்திலும் தொடருமா?

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிக்கொண்டே செல்வதால் இப்படத்தினை நம்பி இப்போ பயன் இல்லை என முடிவெடுத்த நடிகர் அஜித் உடனே ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் இப்படத்தில் இணைந்துவிட்டார். படத்தின் சண்டை காட்சிகள் கொண்ட முதல் ஷெட்யூல் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

விரைவில் படக்குழு இதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் எனக் கூறப்படுகிறது. மார்க் ஆண்டனியின் வெற்றியால் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை மிஸ் செய்ய கூடாது என்ற முடிவுடன் ஆதிக் ரவிசந்திரன் இப்படத்தினை பட்டை தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: எப்பா சூரி நீயா இப்படி நடிச்சிருக்கே? படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை..! பயில்வான் விமர்சனம்

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.