Categories: latest news

எஸ்கே 20 படத்தில் அப்படி ஒரு வேடமா?…ஏம்பா பிரேம்ஜி இது உனக்கு செட் ஆகுமா?…

சென்னை 28 முதல் மாநாடு வரை வெங்கட்பிரபு இயக்கும் எல்லா படங்களிலும் நடிப்பவர் அவரின் தம்பி பிரேம்ஜி. இது எல்லோருக்கும் தெரியும். படத்தில் வேடம் இருக்கிறதோ இல்லையோ, தம்பிக்காக ஒரு வேடத்தை உருவாக்கி நடிக்க வைப்பார் வெங்கட் பிரபு. எனவே, வெங்கட்பிரபு படத்தில் கதை இருக்கிறாதோ இல்லையோ பிரேம்ஜி இருப்பார் என பலரும் கிண்டலடிக்கும் வரை சென்றது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 20வது படத்திலும் பிரேம்ஜி நடிக்கவுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆசிரியர் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் சாய் பல்லவி, சத்தியராஜ் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த இங்கிலாந்து நடிகை மரியா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தில் வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி வில்லனாக நடிக்கவுள்ளாராம். இதுவரை யாரும் பிரேம்ஜியை அப்படி கற்பனை செய்து பார்த்ததே கிடையாது இல்லையா!. நான் ஹீரோவாக நடிக்கிறேன் எனக்கூறி ஒரு படத்தில் சீரியஸாக அவர் நடிக்க படம் படு பிளாப் ஆனது.

வில்லன் என்றால் எப்படிப்பட்ட வில்லன் என தெரியவில்லை. படம் வந்தால்தான் தெரியும்…

Published by
சிவா