
Cinema News
“அரசியலுக்குள் காலடி எடுத்து வைப்பார் பிரேம்ஜி அமரன்!!”… அடேங்கப்பா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
இளையராஜாவின் சகோதரரரும் பிரபல இயக்குனருமான கங்கை அமரன், “கோழி கூவுது”, “கொக்கரக்கோ”, “எங்க ஊரு பாட்டுக்காரன்”, “கரகாட்டக்காரன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். மேலும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். அதே போல் பல திரைப்படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார். இவ்வாறு பன்முகத் திறமை கொண்ட கங்கை அமரன் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Gangai Amaran
கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் வெங்கட் பிரபு. இளைய மகன் பிரேம்ஜி அமரன். வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்பவர். இவர் இயக்கிய முதல் திரைப்படமான “சென்னை 28” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து “சரோஜா”, “கோவா”, போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கிய இவர் அஜித்தின் 50 ஆவது திரைப்படமான “மங்காத்தா” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் வெங்கட் பிரபுவின் கேரியரிலேயே திருப்பு முனையான திரைப்படமாக அமைந்தது.
அதன் பின் “பிரியாணி”, “மாசு”, “சென்னை 28 பாகம் 2” போன்ற திரைப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு ரசிகர்களை அசரவைக்கும் விதமாக சிம்புவை வைத்து “மாநாடு” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Venkat Prabhu and Premji
வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர். மேலும் பிரேம்ஜி, சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “பிரின்ஸ்” திரைப்படத்தில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரின் வருங்காலத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஜோசியர் கணித்திருக்கிறாராம். அதாவது கங்கை அமரன் அவருக்கு நெருக்கமான ஒரு ஜோசியரிடம் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டுச் சென்றிருக்கிறார். அவர்களின் ஜாதகத்தை புரட்டிப் பார்த்த ஜோசியர் “உங்களது மூத்த மகன் மிகப்பெரிய இயக்குனராக வருவான். நிறைய பணம் சம்பாதிப்பான்” என கூறியிருக்கிறார். அதன் படி வெங்கட் பிரபு தற்போது முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: முருகன் ஆசி வழங்குவாருன்னு பார்த்தா அனலை கக்கிட்டாரே… பாரதிராஜா படத்தில் ஏற்பட்ட அபசகுணம்… அடக்கொடுமையே!!

Premji Amaran
அதே போல் பிரேம்ஜி அமரனின் ஜாதகத்தை பார்த்த ஜோசியர் “உங்கள் இளைய மகன் நல்ல நடிகனாக மட்டுமல்லாது அரசியலிலும் பிரகாசிப்பான்” என்று கூறியிருக்கிறார். இதனை கேட்ட கங்கை அமரனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லையாம். ஜோசியர் கூறியபடி பிரேம்ஜி அமரன் நடிகராகிவிட்டார். இனி அரசியிலும் பிரகாசிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.