Premji Marriage: இன்று மிகவும் எளிமையாக பாடகரும் இசையமைப்பாளரும் ஆன பிரேம்ஜியின் திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் நடந்து முடிந்திருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இவர்களது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்து என்ற பெண்ணை காதலித்து பிரேம்ஜி திருமணம் செய்து இருக்கிறார்.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவருடைய அண்ணனும் இயக்குனருமான வெங்கட் பிரபு உடன் இருந்து அனைத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார். திருமணம் முடிந்த புகைப்படங்கள் இணையதளத்தில் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. திருமணத்திற்கான வரவேற்பு சென்னையில் நாளை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு பாட்டு கூட தேறலயே!… அனிருத் மீது காண்டான ஷங்கர்!.. இந்தியன் 2 என்னாகுமோ?!…
திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தம் நடைபெற்று அது சம்பந்தமான புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகின. பிரேம்ஜி திருமணத்திற்கு நடிகர் சிவா, ஜெய், பாடகர் யுகேந்திரன் மற்றும் முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டிருந்தனர். நீண்ட வருட காத்திருப்புக்குப் பின் பிரேம்ஜி அவருடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது.
நேற்று நிச்சயதார்த்தம் என்பதால் ட்ரெடிஷனலான லுக்கில் பிரேம்ஜியும் அவருடைய மனைவி இந்துவும் மணமேடையில் தோன்றினார்கள். பட்டு வேட்டி பட்டு சேலை அணிந்து இருவரும் பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக அழகாக இருந்தார்கள். இருந்தாலும் நம் நெட்டிஷன்கள் சும்மா இருப்பார்களா? பிரேம்ஜி அணிந்திருந்த ஒரு ரப்பர் செருப்பை நோட்டமிட்டு அதை பற்றி ஆராய ஆரம்பித்து விட்டனர்.
இதையும் படிங்க: கடைசி முயற்சியில் விடாமுயற்சி! இது மட்டும் வொர்க் அவுட் ஆகலனா படம் அரோகராதான்..
அது பார்ப்பதற்கு சாதாரண ஒரு ரப்பர் செருப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதில் இருக்கும் சுவாரசிய தகவல் பற்றி இணையதளத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து இருக்கின்றனர். அதாவது பிரேம்ஜி அணிந்திருந்த அந்த ரப்பர் செருப்பின் விலை 6000 ரூபாயாம். சிந்தடிக் லெதரில் செய்யப்பட்ட அந்த செப்பல் மிகவும் நல்ல தரத்துடன் அமைந்ததாம். அதனால் நெட்டிசன்கள் கண்களில் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது என்பதற்கு உதாரணம் தான் இந்த ஒரு செய்தி.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…