ரஜினி மாதிரி நீயும் சர்ப்பரைஸ் கொடு!.. சிம்புவிடம் குசும்பை காட்டிய பிரேம்ஜி…

Published on: December 11, 2021
premji
---Advertisement---

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. ஏற்கனவே அதிக நாட்கள் படப்பிடிப்பில் இருந்ததால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பல கோடிகள் நஷ்டம். எனவே, ரஜினிக்கு குறைவான சம்பளமே பேசப்பட்டது. அதாவது அவர் வாங்கும் சம்பளமான ரூ.100 கோடியிலிருந்து ரூ.20 கோடி குறைத்து ரூ.80 கோடி பேசப்பட்டது. ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டார்.

நவம்பர் 4 தேதி படம் வெளியாகி முதல் 4 நாட்கள் நல்ல வசூலை பெற்றாலும் 5ம் நாள் முதல் மழை துவங்கியதால் மக்கள் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. அதோடு, அதிக வசூலை குவிக்கும் சென்னையில் கனமழை என்பதால் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. எனவே, அண்ணாத்த பட வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தை நடித்து கொடுக்க வேண்டிய நிலைக்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார்.

twitt

இந்நிலையில், இயக்குனர் சிவாவின் வீட்டுக்கு நேரில் சர்ப்பரைஸாக சென்ற ரஜினி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு அவருக்கு தங்க செயின் அணிவித்து பாராட்டியதாக செய்திகள் வெளியானது. இதை டிவிட்டரில் பகிர்ந்த நடிகர் பிரேம்ஜி ‘மை டியர் தலைவா சிம்பு, என் அண்னன் வெங்கட்பிரபு வீட்டின் முகவரியை அனுப்பவா?’ என பதிவிட்டுள்ளார்.

twitt

இதற்கு வடிவேல் வீடியோவை போட்டுள்ளார் வெங்கட் பிரபு. எஸ்.ஜே.சூர்யா ஸ்மைலி போட்டு சிரித்து வைத்துள்ளார்.

Leave a Comment