Cinema News
கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா? ஒரு வெறியோடதான் இருக்காரு
Goat Movie: கோட் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. படத்தைப் பற்றி இயக்குனர் ஒரு பக்கம், தயாரிப்பாளர் ஒரு பக்கம், பிரேம்ஜி ஒரு பக்கம் என புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி ஒரு பெரிய ஹைப் இல்லாத வரைக்கும் படத்திற்கு நல்லது என்று சொன்ன அர்ச்சனா கல்பாத்தியே ரிலீஸ் தேதி நெருங்கும் வேளையில் புதுப்புது சர்ப்ரைஸ்களை கொடுத்த வண்ணம் இருக்கிறார்.
இதையும் படிங்க: முதல் நாளே விஜய் என்கிட்ட ஸ்டிரிக்டா சொன்னது! ‘கோட்’ பட தயாரிப்பாளர் சொன்ன விஷயம்
படத்தில் பல கேமியோ ரோல் இருப்பதாகவும் சமீபத்திய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. யாரும் எதிர்பாராத சில சர்ப்ரைஸ்களும் இருப்பதாக வெங்கட் பிரபு பேட்டிகளில் கூறி வருகிறார். ஏற்கனவே விஜயகாந்த் ஏஐ மூலம் கேமியோ ரோலில் நடிக்கிறார்.
அது போக சிவகார்த்திகேயன், திரிஷா, தோனி போன்றவர்களும் கேமியோ ரோலில் வருவதாக ஆரம்பத்தில் இருந்தே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவர்களை தவிர இன்னும் சில கேமியோ ரோல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் youtube சேனலில் பேட்டி கொடுத்து வரும் பிரேம்ஜி படத்தைப் பற்றி ஏகப்பட்ட தகவல்களை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: கூலி படத்தில் இணைந்த சூப்பர் நடிகை… எதிர்பார்க்கல இல்ல… இப்படி ஒரு சர்ப்ரைஸ..!
படத்தில் பிரேம்ஜியும் விஜயும் மாமன் மச்சான் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லி இருக்கிறார்.அதாவது சினேகாவுக்கு தம்பி கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடிக்கிறாராம். படம் ஒரு பெரிய அளவில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்றும் பிரேம்ஜி கூறி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் 1500 கோடி வசூலை பெரும் என்றும் தெரிவித்திருக்கிறார் பிரேம்ஜி. இந்த நிலையில் கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பர் பற்றிய ஒரு தகவலை கூறி இருக்கிறார். படத்தில் விஜயின் கார் நம்பர் சிஎம் 2026 என்றுதான் இருக்கிறதாம்.
இதையும் படிங்க: கோட் படத்தோட முதல் நாளில் இருந்தே அதுல தான் கவனமாம்..! சொன்னது விஜயின் தீவிர ரசிகை!
இது அவருடைய 2026 சட்டமன்றத் தேர்தலின் இலக்கை அடையும் விதமாக அதை கார் நம்பராக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த காரில் படத்தில் இரண்டே பேர் மட்டும்தான் உட்கார்ந்து இருப்பார்களாம் .அதில் விஜய் மற்றொருவர் பிரேம்ஜி என கூறியிருக்கிறார்.