சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே!...மாநாட படத்தின் ஹைலைட் சீனை கலாய்த்த நெட்டிசன்கள்(வீடியோ)

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படம் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. ஒருவன் ஒரே நாளிடம் சிக்கி கொள்வது போன்ற டைம் லூப் திரில்லராக இப்படம் உருவாக்கப்படிருந்தது. இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

Maanaadu trailer
இப்படத்தில் நடித்த நடிகர் பிரேம்ஜி இப்படம் தொடர்பான ஜாலியான வீடியோக்களை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். ஏற்கனவே , மாநாடு படம் வெளியான போது மாநாடு படத்தின் முதல் காட்சி லீக் ஆனது எனக்கூறி படம் துவங்குவதற்கு முன் கூறப்படும் ‘மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு’ என அவர் பேசும் வீடியோவை வெளியிட்டு ஜாலி பண்ணினார்.
அதேபோல், மாநாடு படத்தில் ஒரு அரசியல் தலைவர் கொலை செய்யப்படுவதை தடுக்க சிம்பு வேகவேகமாக விமானத்தில் இருந்து ஓடி வந்து, பைக்கில் ஏறி அந்த இடத்திற்கு செல்லும் கான்செப்ட்டை அவர் சரக்கு வாங்க டாஸ்மாக் கடைக்கு செல்வதாகவும், அதற்குள் கடையை மூடப்பட அவர் அப்செட் ஆவது போல் உருவாக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், சிம்புவிடம், எஸ்.ஜே. சூர்யா விசாரணை செய்யும் காட்சியை கவுண்டமணி - செந்தில் வாழப்பழ காமெடியை மிக்ஸ் செய்து உருவாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அடப்பாவீங்களா.. சூப்பர் சீனை சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே!’ என பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..
???????????????????????????????????????? @gangaiamaren @vp_offl @thisisysr @SilambarasanTR_ @iam_SJSuryah ???????????????????????????????????????? pic.twitter.com/rupA8eyJVu
— PREMGI (@Premgiamaren) December 23, 2021