அந்தகன் படத்துக்கு பிறகு ஹீரோயின்களை எச்சரித்த ப்ரியா ஆனந்த்! பிரசாந்த் இப்படியா?

by Rohini |   ( Updated:2024-08-13 07:24:24  )
priya
X

priya

Anthagan: தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரசாந்த். ‘வைகாசிப் பொறந்தாச்சு’ படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த் முதல் படத்திலேயே பெரிய வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார்.

அதுமட்டுமில்லாமல் மணிரத்னம், ஷங்கர் என பிரம்மாண்ட இயக்குனர்களுடன் இணைந்து ப்ளாக் பஸ்டர் வெற்றிப் படங்களை கொடுத்தார் பிரசாந்த். பிரசாந்த் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களாக திருடா திருடி, ஜீன்ஸ் போன்ற படங்களை சொல்லலாம்.

இதையும் படிங்க: டிஆர்பி இருந்தும் டாப்ஹிட் சீரியலுக்கு மூடுவிழா வைத்த சன் டிவி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்தார் பிரசாந்த். அந்தகன் படமும் நினைத்துப் பார்க்காத அளவு வெற்றி பெற்று பிரசாந்திற்கு ஒரு பேரைக் கொடுத்தது. மேலும் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் கோட் படத்திலும் பிரசாந்த் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கோட் படத்திற்கு முன்னதாகவே அந்தகன் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற முடிவில் தியாகராஜன் இருந்தார். எப்படியாவது ஒரு ஹிட்டை கொடுக்கவேண்டும் என அந்தகன் படத்தின் மூலம் ஹிட்டை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அந்தகன் படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.

இதையும் படிங்க: சூரிக்கு இது ஒரு ஆடுகளம்!.. விருது நிச்சயம்!.. கொட்டுக்காளி டிரெய்லர் வீடியோ…

பிரசாந்த் ,சிம்ரன் மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் படத்தின் வெற்றியை பற்றி பல பேட்டிகளில் பகிர்ந்து வருகின்றனர். இதில் ப்ரியா ஆனந்த் பிரசாந்தை பற்றி கூறியது பெரும் வைரலாகி வருகின்றது.

அதில் ப்ரியா ஆனந்த் கூறும் போது ‘இது பிரசாந்திற்கு 50வது படம். அதுவும் ஹிட்டாகி விட்டது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க இனி வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைக்கும். அதனால் அவருடன் நடிக்க வரும் நடிகைகளுக்கு ஒன்று சொல்கிறேன். அவருடன் யாரும் தயவு செய்து பேசாதீர்கள்’ என கூறினார்.

இதையும் படிங்க: லெஜெண்ட் அண்ணாச்சி பட கதையும் எஸ்.கே 23 கதையும் ஒன்னா? முருகதாஸுக்கு இதே வேலையா?

அதற்கு காரணம் பிரசாந்துடன் பேசும் போது நிறைய கிண்டல் செய்வார். டேக் என்று சொன்னதும் அவர் அனுபவம் வாய்ந்த நடிகர். அப்படியே காட்சிக்கு ஏற்றப்படி மாறிவிடுவார். ஆனால் நான் சிரித்துக் கொண்டே இருப்பேன். என்னை திட்டுவார்கள். அதனால் எந்த நடிகைகளும் அவருடன் பேசாதீர்கள் என ப்ரியா ஆனந்த் கூறினார்.

Next Story