தூக்கலான கிளாமரில் நடிகைங்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லி!.. சினிமாவுல நடிக்க போறீங்களா?!..

Published on: June 14, 2024
priya atlee
---Advertisement---

சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் பிரியா. சினிமாவில் ஆர்வமுள்ள இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. 2020ம் வருடம் வெளிவந்த அந்தகாரம் என்கிற படத்தை தயாரித்தவரும் இவர்தான். பிரியா பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

priya

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்திருப்பார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும்போதே அட்லியுடன் பழக்கம் ஏற்பட்டது. பல வருட நட்பு காதலாக மாறி ஒரு கட்டத்தில் அட்லியை திருமணமும் செய்து கொண்டார்.

priya

அட்லி உருவாக்கும் படங்களில் கதை, விவாதங்களில் கலந்து கொள்வது, ஃப்ரி புரடெக்சன் வேலைகளை கவனிப்பது என அட்லிக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.

priya

அட்லி தயாரித்த சில படங்களின் தயாரிப்பு வேலைகளையும் பிரியா செய்திருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. கடந்த சில நாட்களாகவே பிரியா நடிகைகளை போல விதவிதமாக உடையணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

priya

இதைப்பார்த்த பலரும் பிரியாவுக்கு திடீரென என்னாச்சி?.. எதாவது சினிமாவில் நடிக்க போகிறாரா என சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆர்வத்தில் இதை செய்து வருகிறாரா இல்லை வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்பது போக போகத்தான் தெரியவரும்.

priya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.