வாவ்.. சேலையில் புதுப்பெண்போல் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற நடிகை என்றால் பிரியா பவானி சங்கர் தான். செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் பின்னர் சீரியலில் களமிறங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 2017ல் 'மேயாத மான்' படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இவர் நடித்திருந்த 'ஓ மணப்பெண்ணே' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் கைவசம் மட்டும் தற்போது 10க்கும் அதிகமான படங்கள் உள்ளன. இவ்வளவு பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
அந்தவகையில் தற்போது பச்சை நிற புடவையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புதுப்பெண்போல ஜொலிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.