கை கொடுக்குமா அந்த படம்?-பெரும் எதிர்பார்ப்பில் பிரியா பவானி சங்கர்
விஜய் தேவரகொண்டா ரிது வர்மா நடிப்பில், கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் பெல்லி சூப்புலு . இப்படத்தின் ஒன்லைன் உணவு சம்பந்தமான யூடியூப் சேனல் தான். தவறுதலாக ரிது வர்மாவை பெண் பார்க்க செல்லும் விஜய் தேவரகொண்டா, அதனால், இருவரும் தொழிலில் பார்ட்னராக, பின் வாழ்விலும் எப்படி பார்னராகிறார்கள் என்பதே திரைப்படம், விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா, இருவருக்குமே பெரும் அடையாளம் தந்த படம்.
இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) மற்றும் ரிது வர்மா கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar) நடித்துள்ளனர். தமிழுக்கு ஏற்றபடி எமோசன்கள் அதிகமாக உள்ளது. பிரியா பவானி சங்கருக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. வெகு இயல்பாக இருக்கிறார். அதேநேரம் ரிது வர்மா நாம் அதிகம் பார்க்காத முகம் என்பதால் டக் என்று ஈர்த்தது. ஆனால் அதே கேரக்டரில் நடிக்கும் பிரியா பவானி சங்கர் தினமும் செய்திகளிலும், ஊடகங்களிலும் பார்த்த முகம் என்பதால் வசீகரிக்கவில்லை. அதேநேரம் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்து பிரியா பவானி சங்கர் இருப்பதால் படத்தில் இவர் எப்படி நடித்திருப்பார் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.
ஹரிஸ் கல்யாண் விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்தில் வருகிறார். அந்த பாத்திரம் அப்படியே இவருக்கு செட் ஆகி உள்ளது. ஆனால் ஒரு படத்தை போலவே எடுக்கப்படும் இன்னொரு படத்தில் அவரைப்போலவே இவரிடம் எக்ஸ்பிரசன் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பு சரியாக இருக்காது என்பதால் அந்த விமர்சனங்களுக்கு போக வேண்டாம். கதை நல்ல கதை. நல்ல உழைப்பை கொட்டி உள்ளார். விஜய் தேவரகொண்டாவிற்கு இந்த படம் மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது. அது போல் இவருக்கும் அடையாளம் கொடுக்குமா என்பது அக்டோபர் 22ம் தேதி சிட்னி பிளஸ் ஹாட்ஸ்டாரி பாருங்கள். இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு தான் பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாணுக்கு ஒரு அங்கீகரத்தை பெற்று தரும் என்பதால் இருவரும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.