Categories: Entertainment News

எதுக்கு இந்த வேண்டாத வேலை…! ஃபேஷன்கிற பேர்ல கொல செய்யும் பவானி சங்கர்..

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின் படிப்படியாக பெரியதிரைக்குள் நுழைந்தார். செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் பின்னர் சீரியலில் களமிறங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2017ல் ‘மேயாத மான்’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இவர் நடித்திருந்த ‘ஓ மணப்பெண்ணே’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் கைவசம் மட்டும் தற்போது 10க்கும் அதிகமான படங்கள் உள்ளன. இவ்வளவு பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இந்த நிலையில் சேலையில் சிம்பிளா பார்த்தால் கூட ஆளு செம தூளா இருப்பாங்க. ஆனால் ஃபேஷனு சொல்லி ஒரு வித்தியாசமான ஆடையில் கண்ட்ராவியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
Rohini