காதலரிடம் ரெண்டு விஷயத்துக்கு நோ சொல்லிட்டேன்!.. ஓப்பனா பேசும் பிரியா பவானி சங்கர்..

by Rohini |   ( Updated:2023-06-14 04:04:58  )
priay
X

priay

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக மாறி வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் நியூஸ் ரீடராகவும் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்தான் பிரியா பவானி சங்கர் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை ’ என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.

அந்த சீரியலில் அவருக்கு கிடைத்த ஒரு வரவேற்பு தான் வெள்ளித்திரை வரை கொண்டு சென்றது. ஆனாலும் நடிக்க வந்த புதிதில் துணை நடிகையாகவே அறியப்பட்டார் பிரியா பவானி சங்கர். அதன்பிறகு அவருடைய எதார்த்தமான நடிப்பு, எளிய தோற்றம் என ஒரு முன்னனி நடிகையாக மாற்றியது.

priya1

priya1

மான்ஸ்டர், மாஃபியா, யானை, திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் போன்ற முன்னனி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது இந்தியன் 2 படத்திலும் இணைந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் கூட எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கரை ‘இவருக்கு சிம்ரன் , த்ரிஷா மாதிரி ஒரு முகத்தோற்றம் இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

மேலும் பிரியா பவானி சங்கர் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’ படத்தில் இணைந்திருக்கின்றனர். இது குறித்து ஒரு பேட்டியில் தொகுப்பாளர் பிரியா பவானியிடம் நீங்க சின்ன வயதில் பொம்மையை வைத்து விளையாடியிருக்கிறார்களா? எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த பிரியா பவானி ‘அப்படியெல்லாம் இல்லை, மேலும் நான் என்னுடைய 18 வயதிலேயே ரிலேஷன்ஷிப்பில் இணைத்துக் கொண்டேன். என் பாய் ஃபிரண்ட்கிட்டயும் டெடி பியர் மாதிரி எதாவது பொம்மையை வாங்கிட்டு வந்து கொடுத்துராதே, தேவையில்லாமல் காச வேஸ்ட் பண்ணாதே அதற்கு பதிலா ஏதாவது சாப்பாடு வாங்கி கொடு’ என்று சொல்லிவிடுவாராம்.

priya2

priya2

அதுமட்டுமில்லாமல் இந்த ரோஜா மாதிரியான பூக்களை வாங்கிக் கொடுக்கிறதும் வேண்டாம் என சொல்லிவிடுவாராம். அவன் வாங்கிட்டு வரதுக்குள்ள அது வாடிரும், அதனால் அந்த இரண்டு விஷயங்களை தவிர்க்க சொல்லிருவேன் என்று பிரியா பவானி சங்கர் கூறினார்.

இதையும் படிங்க : நான் அவள நம்பி ஏமாந்துட்டேன்! என்னாச்சுப்பா இவங்களுக்கு? சோகத்தை பகிர்ந்த செந்தில்

Next Story