ஹரீஷ்கல்யாணுடன் காதலில் விழுந்த பிரியா பவானிசங்கா்..!!இதென்ன புது புரளியா இருக்கு..!
பிரபலமான நடிகர் அல்லது நடிகை குறித்த வதந்திகள் மற்றும் கிசு கிசுக்கள் வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சமீபத்தில் வெளியான கிசு கிசு என்றால் அது நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஆகிய இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி தான்.
இவர்கள் இருவரும் இணைந்து ஓ மணப்பெண்ணே என்ற படத்தில் நடித்திருந்தனர். ஓடிடியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு, இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரி மற்றும் ஜோடி மக்கள் மத்தியில் ஹிட்டானது. மேலும் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கூற தொடங்கினார்கள்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் நடிகை பிரியா பவானி சங்கர் ராஜ்வேல் என்பவரை பல வருடமாக காதலித்து வருகிறார். இதை அவரே பலமுறை புகைப்படங்கள் மூலம் வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாக இவர்கள் இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாகவும், தற்போது பிரியா மற்றும் ஹரீஷ் கல்யாண் ஆகிய இருவரும் தான் காதலித்து வருகிறார்கள் எனவும் வதந்தி பரவி வந்தது. இதனை கண்ட பிரியா பவானி சங்கர் ஒரு போட்டோ மூலம் பதில் அளித்துள்ளார்.
அதன்படி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது காதலனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள பிரியா பவானி சங்கர் மீண்டும் ஒருமுறை நாங்கள் யாருக்காகவும் எங்கள் காதலை விட்டுக் கொடுக்க மாட்டோம், நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார்.