மஞ்சக்காட்டு மைனா மனச கெடுக்குது!… புடவையில் இளசுகளை இழுக்கும் பிரியா பவானி சங்கர்!..
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்யும் போது தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரியா பவானி சங்கர்.
பார்ப்பதற்கு நடிகை போல இருக்கும் இவர் ஏன் செய்தி வசிக்கிறார் என நெட்டிசன்கள் இவரின் அழகில் சொக்கிப்போனார்கள். சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும்.
இதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால், கிளாமர் காட்டி நடிக்க வேண்டியிருக்கும் என்பதால் அந்த வாய்ப்புகளை மறுத்தார்.
ஆனாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க வந்த போது அதை ஏற்று நடித்தார். அப்படியே மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார். தற்போதும் சில திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். ஆனாலும், கவர்ச்சி காட்டாமல் டீசண்டான உடைகளை மட்டுமே அணிந்து சினிமாவில் இப்போதுவரை நடித்து வருகிறார்.
இந்நிலையில், மஞ்சள் நிற புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.