எங்க சீன் எல்லாத்தையும் கட் பண்ணீட்டாங்க.. – இரண்டு நடிகைகளை வெறுப்பேற்றிய ஜெயம் ரவி பட இயக்குனர்!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் படமான ஜெயம் படத்தில் துவங்கி எம்.குமரன், ஆதி பகவான், தனி ஒருவன் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.
போன வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தவிர்த்து வெளிவந்த மற்ற திரைப்படங்கள் அவருக்கு ஆவரெஜ் ஹிட் திரைப்படங்களாகவே அமைந்து வருகிறது.
தற்சமயம் அவரது நடிப்பில் அகிலன் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. கல்யாண கிருஷ்ணன் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து பூலோகம் என்னும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார் ஆனால் இந்த படம் அந்தளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
அகிலன் திரைப்படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் இறுதியில் எடிட் செய்யும்போது அவரின் பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் கோபமான ப்ரியா பவானி சங்கர் படத்தின் ப்ரோமோஷனுக்கே வரவில்லை என கூறப்படுகிறது.
அதே போல அந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவரை வைத்தும் பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதியில் படத்தில் ஓரிரு காட்சிகளே இடம் பெற்றுள்ளன. இதனால் இந்த இரண்டு நடிகைகளும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.