வாவ்..அல்ட்ரா modern லுக்கில் பிரியா பவானி சங்கர்... கிளாமர் இல்லனாலும் நீ ஹாட்தான்..
செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போது இவருக்கு என தனி ரசிகர் கூட்டம் இருந்தது. காரணம் அவரின் அசத்தலான அழகு மட்டுமே. விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின் மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார்.
தற்போதும் அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகையாக அவர் இருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தீவுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.