பிரியா பவானி சங்கருடன் லிப்லாக்!.. எஸ்.ஜே.சூர்யா உனக்கு மச்சம்யா!.. லீக் ஆன புகைப்படம்..
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராக பணிபுரிந்தவர் பிரியா பவானி சங்கர். அப்போது இவரின் அழகில் மயங்கி இவருக்கு ரசிகர் கூட்டம் உருவானது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. பல இயக்குனர்கள் இவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க விரும்பினார். ஆனால், சினிமா என்றால் கட்டிப்பிடித்து நடிக்க வேண்டும், கவர்ச்சி காட்ட வேண்டும், தேவைப்பட்டால் முத்தக்காட்சிகளில் நடிக்க சொல்வார்கள் என்பதால் பிரியா சினிமாவில் வந்த வாய்ப்புகளை மறுத்தார்.
அதேநேரம், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். அதன்பின் ‘மேயாத மான்’ படம் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இப்போது வரை பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால், இதுவரை எந்த படத்திலும் கவர்ச்சியாக இவர் உடை அணிந்தது இல்லை. டீசண்ட்டான உடையணிந்து டீசண்டான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்போது திடீரென எஸ்.ஜே.சூர்யாவுக்கு அவர் லிப்லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொம்மி என்கிற படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரிய பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தில்தான் இந்த காட்சி இடம் பெற்றுள்ளது.
இதுவரை முத்தக்காட்சியில் நடித்திராத பிரியா இப்போது எதற்காக இப்படி நடிக்க முடிவெடுத்தார் என தெரியவில்லை. இதைப்பார்த்த அவரின் ரசிகர்கள் ‘ப்ளீஸ்க்கா இப்படியெல்லாம் நடிக்காதீங்க’ என பொங்கி வருகின்றனர்.