காதலனுடன் லிவ்விங் டூகெதர்...கன்னம் உரசும் பிரியா பவானி சங்கர்...என்ன செல்லம் இதெல்லாம்!...

priya bhavani shankar_Rajvel Raj
நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்டகால காதலருடன் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் தான் தற்போதைய வைரலாகி இருக்கிறது.

priya bhavani shankar_Rajvel Raj
தமிழ் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர். பல வருடமாக செய்தி வாசித்தவருக்கு விஜய் டிவியில் ஒரு சீரியலுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. கல்யாணம் முதல் காதல் வரை என்ற ரீமேக் நாடகத்தின் மூலம் பலர் வீட்டில் அறிமுகமானார்.
இதையும் படிங்க: கறார் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்… பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்… இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாவா இருப்பாங்க??
தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் வர துவங்கியது. 2017ம் ஆண்டு மேயாத மான் படம் மூலம் நடிகையாக கோலிவுட்டில் எண்ட்ரி ஆகிறார். முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறது.

priya bhavani shankar_Rajvel Raj
இதில் முக்கியமாக மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. சிம்புவுடன் பத்து தல, அருள்நிதியுடன் டிமாண்டி காலனி 2, முக்கியமாக கமலின் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 என அம்மணி செம பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் ராஜ்வேல் ராஜுடன் கன்னம் உரசி எடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தினை வெளியிட்டார். அதில் 18 வயதில் இருந்தே நாங்கள் கடற்கரை ஓர வீட்டின் மீது காதல் கொண்டோம். இப்படி ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதே எங்களின் கனவாக இருந்தது. இன்று அது நடந்து நாங்கள் அந்த வீட்டில் குடியேற இருக்கிறோம் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

priya bhavani shankar_Rajvel Raj
இந்த பதிவிற்கு கீழ் பிரபலங்கள் பலரும் வந்து தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலரோ அப்போ லிவிங் டு கெதரா இருக்கப் போறீங்களா? கல்யாணம் பண்ணிக்கலையா என தொடர்ந்து கேள்விகளையும் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.