உன் போட்டோவ விடிய விடிய பாக்கலாம்!.. இளசுகளை ஏங்க வைத்த பிரியா பவானி சங்கர்!..
டிவியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தவர் பிரியா பவானி சங்கர். பார்க்க அழகாக இருப்பார் என்பதால் அப்போதே இவருக்கு ரசிகர்கள் உருவானர்கள். சினிமாவில் நடிக்க வாய்ப்பும் வந்தது. ஆனால், கவர்ச்சியான உடையணிய சொல்வார்கள் என்பதால் அதை ஏற்க மறுத்தார்.
ஆனால், விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தபோது பிரியாவால் மறுக்க முடியவில்லை. அப்படித்தான் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்தார். பல மாதங்கள் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. அதன்பின் மேயாத மான் என்கிற படம் மூலம் திரைப்படத்திலும் நடிக்க துவங்கினார்.
இந்த படத்தின் இவரின் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். அதேநேரம், கவர்ச்சியான உடை அணியக்கூடாது என்பதில் இப்போதுவரை உறுதியாக இருக்கிறார். ஒருபக்கம், இவரின் நடிப்பில் வெளியான 70 சதவீத படங்கள் ஓடவில்லை.
எனவே, இவர் நடித்தாலே படம் ஓடாது என திரையுலகில் ஒரு செண்டிமெண்ட் இருக்கிறது. ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போன இந்தியன் 2 படத்திலும் பிரியா நடித்திருந்தார். என்னை ராசியில்லாத நடிகை என எல்லோரும் சொல்வது காயப்படுத்துகிறது என ஒரு பேட்டியில் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.
இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள டிமாண்டி காலணி 2 திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இது அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடார்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.