ஜாலியாக சுற்றும் ஓ மனப்பெண்ணே..? பத்து வருட காதல் முறிவுக்கு வருமா...?
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியாபவானி சங்கர். இவர் விஜய்டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் வெளிவந்த ஓ மனப் பெண்ணே படத்தில் ஹரிஸ்கல்யானுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு பின் வெளி நிகழ்ச்சி, நேர்காணல் போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நடிகர் ஹரிஸ் கல்யானுடன் தான் சேர்ந்து கலந்து கொள்கிறார். மேலும் தன் உடலை இன்னும் ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள ஜிம்மிற்கு செல்கிறார்.
ஜிம் மாஸ்டர் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் கேட்கிறார். மேலும் ஹரிஸ் மற்றும் ஜிம் மாஸ்டருடன் தான் வெளியில் அதிகமாக காணப்படுகிறார். இதனால் பிரியா பவானி சங்கர் காதலர் மனவருத்ததில் இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
மேலும் இவர் 10 வருடங்களாக ஒருவரை காதலிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவரின் இந்த செயலால் காதல் கைகூடுமா? இல்லை வெற்றி பெறுமா ? என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.