---Advertisement---

கல்யாண மூடுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்… புதிய படங்களை தவிர்க்க இதுதான் காரணமா?

Published on: April 9, 2026
Priya Bhavani Shankar marriage
---Advertisement---

தமிழ் திரையுலகில் இளம் நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் இளம் முன்னணி நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பயணத்தை தொடங்கியவர் இவர். மீடியாவில் பணியாற்றும்போதே இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உண்டு. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் நுழைந்தார்.

முதல் படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றதி அடுத்து மளமளவென படங்கள் குவிய துவங்கின. கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம்’, எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் , பொம்மை, அருண் விஜய்யுடன் மாஃபியா , யானை , தனுஷுடன் திருச்சிற்றம்பலம் மற்றும் டிமாண்டி காலனி 2 என பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் நுழைந்த காலத்திலிருந்தே இவரது காதல் குறித்த செய்திகள் இணையத்த்தில் வலம் வந்தன. நீண்ட காலமாகவே இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார் பிரியா.

இந்நிலையில் இவர்களது திருமணம் இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமண ஏற்பாடுகளுக்காகவே அவர் புதுப் படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் கைவசம் மரகத நாணயம் 2 மற்றும் ‘டிமாண்டி காலனி 3 ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன.

விரைவில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சுவில் பகிரப்பட்டது.