எத்தனை பேர் வந்தாலும் நீதான் க்யூட்டு!.. ஜொள்ளுவிட வைக்கும் பிரியா பவானி சங்கர்...

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் பிரியா பவானி சங்கர். அப்போதே இவரின் அழகில் மயங்கி இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். எனவே, அவருக்கு சினிமாவில் நடிக்க அழைப்புகள் வந்தது. ஆனால், கவர்ச்சி காட்ட சொல்வார்கள் என்கிற காரணத்துக்காக அவர் செல்லவில்லை. அதோடு, அதில் அவர் ஆர்வமும் காட்டவில்லை.
ஒருகட்டத்தில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் டீசண்டான வேஷம் என்பதால் நடிக்க ஒப்புகொண்டார். இப்படித்தான் பிரியாவின் நடிப்பு கேரியர் துவங்கியது. மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அந்த படத்தில் அவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.
அதன்பின் பல படங்களிலும் நடிக்க துவங்கினார். ஓ மணப்பெண்ணே, பொம்மை, யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல, ரத்னம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரத்னம் படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. எனவே, ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு காத்திருக்கும் இந்தியன் 2 படத்தை நம்பி இருக்கிறார்.
இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பிரியா அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுண்டு.
இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் சிட்னி நகரில் எடுக்கப்பட்ட கியூட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருக்கிறார்.