நெல்சனுக்கு தங்கச்சியா இருக்கும் போல!.. பணத்துக்காக தான் வந்தேன்!.. பிரபல நடிகை ஓபன் டாக்..

priya
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகை பிரியா பவானிசங்கர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தன் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடருக்காக பிரபலமாக அறியப்பட்டார்.
அந்த ஒரு சீரியலில் அவருக்கு கிடைத்த கௌரவம் வெள்ளித்திரை வரை கொண்டு சென்றது. பாதியிலேயே அந்த தொடரிலிருந்து விலகினார். வெள்ளித்திரையில் தன் பயணத்தை ஆரம்பித்தார். நடித்த ஒரு சில படங்களிலே குறிப்பிடத்தக்க நடிகையாக வளர்ந்தார்.

priya1
மேயாத மேன், கடைக்குட்டிச்சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் நடித்த பிரியா பவானிசங்கர் கைவசம் வெயிட்டான படங்களின் வாய்ப்புகளையும் வைத்துள்ளார். அதுவும் கமல் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் - 2 படமும் அடங்கும்.
இதையும் படிங்க : சர்ச்சை சாமியாருக்கு ஜெயிலுக்குள் வைத்து கதை சொன்ன பிரபல இயக்குனர்… இவர்தான் புரொட்யூசரா?? என்னப்பா சொல்றீங்க!!
இவரின் எளிமையான தோற்றம், வசீகரமாக முக அழகு என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் இவரின் ஒரு கருத்து இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன் எந்த ஒரு திட்டமும் இல்லையாம். மேலும் ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பதை பற்றியும் கவலைப்படவில்லையாம்.

priya2
சினிமாவிற்குள் நுழைந்தால் பணம் கிடைக்கிறது என்று மட்டும் என் மனதில் தோன்றியது அதனாலதான் நடிக்க வந்தேன் என்று கூறியிருந்தார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று நினைக்கும் நடிகர்கள் நடிகைகள் எப்படி ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்க முடியும் என்று புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்.
இதே மாதிரியான கருத்தை தான் சில மாதங்களுக்கும் முன் இயக்குனர் நெல்சன் கூறியிருந்தார். பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவிற்கு வந்தேன் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார். இப்படி பணம் பணம் என்று நினைக்கும் பிரபலங்களை நம்பி ரசிகர்கள் ஏமாறுவது தான் மிச்சம்.

priya3