More
Categories: Cinema News latest news

பிரியா பவானி ஷங்கர் ஒரு தீய சக்தி?? அலுவலகத்தில் நடந்த விசித்திர சடங்கு… என்னம்மா சொல்றீங்க!!

பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக திகழ்ந்த பிரியா பவானி ஷங்கர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரின் மூலம் ரசிகர்களிடம் பரவலாக அறியப்பட்டார். அத்தொடரில் நடிக்கும்போதே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் உருவானது.

அதனை தொடர்ந்து “மேயாத மான்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி ஷங்கர், “கடைக்குட்டி சிங்கம்”, “மான்ஸ்டர்” போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தனுஷ் நடித்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் அழகு பதுமையாக வலம் வந்து இளைஞர்களின் மனதை கொள்ளைக்கொண்டு போனார்.

Advertising
Advertising

Priya Bhavani Shankar

தற்போது பிரியா பவானி ஷங்கர் , “பத்து தல”, “அகிலன்”, “ருத்ரன்”, “பொம்மை” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கமல்ஹாசனின் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் “இந்தியன் 2” திரைப்படத்திலும் பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரியா பவானி ஷங்கர், தான் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது பிரியா பவானி ஷங்கர், பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக சேர்ந்த புதிதில், முதல் நாள் செய்தி வாசிப்பதற்காக அரங்கத்தில் அமர்ந்திருந்தாராம். அப்போது ஒரு சாமியார் அந்த அரங்கத்தில் ஆங்காங்கே தண்ணீர் தெளித்தபடி இருக்க, பிரியா பவானி ஷங்கரின் முகத்திலும் தண்ணீர் தெளித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பிரசாந்த் மட்டும் நடிக்க வரலைன்னா என்னவா ஆகியிருப்பார் தெரியுமா?? நீங்க இதை கேள்விபட்டுருக்கவே மாட்டீங்க!!

Priya Bhavani Shankar

அவர் அப்போதுதான் மேக்கப் போட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்தாராம். இதன் பின் அங்கிருந்த கேமரா மேன்னிடம் “என்ன பண்றாங்க?” என கேட்டபோது அவர் பிரியாவை பார்த்து “தீய சக்தி அண்டாமல் இருப்பதற்காக இப்படி செய்றாங்க” என கூறினாராம்.

“என்னடா இது, நான் முதல் நாள் செய்தி வாசிக்கப்போறேன். என்னைய தீய சக்தின்னு சொல்லிட்டாங்களே” என கோபப்பட்டாராம். இந்த சம்பவத்தை தனது பேட்டியில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.

Published by
Arun Prasad

Recent Posts