தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரியா பவானி சங்கர்.
நடிகை போல அழகாக இருந்ததால் அவருக்கு ரசிகர் கூட்டம் உருவானது. சமூகவலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும்.
இதன்காரணமாக சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால், கவர்ச்சி காட்டி நடிக்க சொல்வார்கள் என்பதால் துவக்கத்தில் பிரியா ஆர்வம் காட்டவில்லை.
விஜய் டிவியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் சீரியல் உருவானபோது அதில் நடிக்க வாய்ப்பு வந்தது. சீரியல் என்பதால் அவரும் நடித்தார்.
அதன்பின் ‘மேயாத மான்’ படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், இப்போது வரை பல படங்களில் கவர்ச்சி காட்டாமலும், எல்லை மீறாமலும் நடித்து வருகிறார்.
அதேநேரம், பொம்மி என்கிற படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் லிப்லாக் காட்சிகளெல்லாம் நடித்து அதிர வைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஒருபக்கம், அழகான உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில தினங்களுக்கு…
நடிகர் விஜய்யை…
சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக…
தமிழ் சினிமாவில்…
Vijay: ஃபெங்கால்…