
Cinema News
எனக்காக தான் அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார்… ரகசியம் பகிர்ந்த இளம் நடிகை….!
சின்னத்திரை மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் டாப் நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதாலோ என்னவோ ரசிகர்களுக்கு பார்த்ததும் பிடித்து விட்டது போல.
தற்போது கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் இளம் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சுமந்த் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படம் படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “இயக்குனர் ஹாஸ்டல் படத்தின் கதையை கூறியபோது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இந்த கதையில் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் கூறினார்.
எனவே நான் நடிகர் அசோக்செல்வனுக்கு போன் செய்து ஹாஸ்டல் படத்தின் கதையை கூறினேன். அவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அசோக் செல்வனால் ஹாஸ்டல் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
ஆனால் என்னிடம் கொண்ட நட்பிற்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்க அசோக் செல்வன் ஒப்புக்கொண்டார்” என கூறியுள்ளார்.