ஆல்ரெடி மனச பறிகொடுத்துட்டோம்!.. இளசுகளை வசியம் பண்ணும் பிரியா பவானி சங்கர்!..
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் பிரியா பவானி சங்கர். இப்படித்தான் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். அப்போதே அவருக்கு ரசிகர் கூட்டமும் இருந்தது.
அழகாக இருக்கிறார், குரலும் அழகாக இருக்கிறது என்றால் விடுவார்களா!.. சில இயக்குனர்கள் இவரை தங்களின் திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்பினார்கள்.
ஆனால், சினிமாவில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில், கவர்ச்சி காட்ட வேண்டியிருக்கும் என தயங்கினார்.
ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் டீசண்ட்டான வேடம் என்றதும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அதன்பின் மேயாத மான் படத்தில் நடித்தார். இப்போதுவரை கவர்ச்சி காட்டாமல் டீசண்ட்டான வேடங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான அகிலன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதுபோல், அழகான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்டும், கருப்பு நிற டாப்ஸும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வசீகரித்துள்ளது.