மறுபடியும் சினிமாவுக்கு வா செல்லம்!. ஸ்லிம் பியூட்டியை காட்டி இழுக்கும் பிரியாமணி..
பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பிரியாமணி. தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். பல நடிகர்களுடனும் ஜோடி போட்டுள்ளார்.
கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். ஆனால், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் பார்வை இவர்மேல் படவில்லை.
பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தும் சினிமாவில் பெரிய அளவுக்கு அவரால் வரமுடியவில்லை. தமிழில் வாய்ப்புகள் குறைந்ததும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார்.
திடீரென திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கினார். அதோடு, ஒல்லி பெல்லி உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார்.
இந்நிலையில், பிரியாமணியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் ‘மறுபடியும் சினிமாவுக்கு வா செல்லம்’ என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.