டம்மி பீஸ் ஆக்கப்பட்ட த்ரிஷா!.. குட் பேட் அக்லியில் கலக்கியதே இந்த ரெண்டு ஹீரோயின்கள் தான்!..

இன்று திரையரங்குகளையே கலக்கி கொண்டிருக்கும் குட் பேட் அக்லி படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷாவையே ஓவர் டேக் செய்தது யார் என்றால் அது நம்ம பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் சிம்ரன் தான்.
கேரளாவை சேர்ந்த பிரியா வாரியர் ஓமர் லுலு இயக்கிய ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், ஃபைனல்ஸ் என்ற படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார். அதை தொடர்ந்து ஸ்ரீதேவி பங்களா, விஷ்ணு பிரியா, தனஹா லவ்வர்ஸ் டே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலும் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துள்ள பிரியா வாரியர் கதாநாயகியாக நடித்த த்ரிஷாவையே ஓவர் டேக் செய்துள்ளார். குட் பேட் அக்லி படத்தில் பிரியா வாரியர் அர்ஜூன் தாஸுடன் இணைந்து “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” பாடலுக்கு ஆடிய ஆட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயர்ச்சி படத்திலேயே நடிகை த்ரிஷாவின் ரோல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என பலரும் விமர்சித்து இருந்த நிலையில், குட் பேட் அக்லி படத்திலும் த்ரிஷாவிற்கு பாராட்டும்படியாக எந்த சீனும் கொடுக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு எமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷாவிற்கு பதிலாக சிம்ரானும் பிரியா வாரியரும் ஸ்கோர் செய்துவிட்டனர். இந்த படத்திற்கு பிறகு பிரியா வாரியரின் கால்ஷீட்டிற்கு டிமாண்ட் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
த்ரிஷாவை கடத்தும் பெண்ணாக வரும் சிம்ரன் அஜித் குமாருடன் போனில் பேசும் காட்சிகளுக்கும், இருவரும் சந்திக்கும் செம மாஸான அந்த பேப்ஸ் சீனுக்கும் தியேட்டரே தெறிக்கிறது. த்ரிஷா இல்லைன்னா நயன்தாரான்னு படம் எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் த்ரிஷா இருந்தும் சிம்ரன் மற்றும் பிரியா வாரியர் மீது அதிக ஃபோகஸ் வைத்துள்ளது ஏன் என்று தான் தெரியவில்லை.