தனுஷ் இயக்கத்தில் தனுஷ் அக்கா மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் நடித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கேமியோவாக கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு கடைசியாக நடனமாட இருந்தார் நடிகை பிரியங்கா மோகன்.
கன்னடத்தில் அறிமுகமாகமான பிரியங்கா மோகன் தெலுங்கில் நானே நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் டோலிவுட்டில் நுழைந்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான், தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.
பிரியங்கா மோகன் நடிப்பில் தமிழில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்களை தவிர்த்து மற்ற படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், அவருக்கு கோலிவுட்டில் மொத்தமாக மார்க்கெட் சரிந்து விட்டது. தெலுங்கில் கடைசியாக நானியுடன் இணைந்து சரிபோதா சனிவாரம் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்துக்கு முன்னதாக அவர் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் உடன் இணைந்து ஓஜி படத்தில் நடித்திருந்தார். அரசியலில் நுழைந்ததன் காரணமாக பவன் கல்யாண் அந்த படம் இன்னமும் வெளியாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் இளம் ரசிகர்கள் மத்தியில் பிரியங்கா மோகனுக்கு தனி இடம் இருந்து வந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு அந்த இடத்தையும் பிரியா வாரியர் பிடித்துவிட்டார் என்கின்றனர்.
சிம்ரனுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இடுப்பழகை காட்டி சுல்தானா பாடலுக்கு அவர் ஆட்டம் போட்டதை பார்க்க மீண்டும் மீண்டும் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று கொண்டாடி வருகின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பிரியா வாரியருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் பாவம் பிரியங்கா மோகனை திரையுலகம் கழட்டி விட்டதாகவும் ஓஜி படம் ஓடினால்தான் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.