சும்மா சிக்குன்னு நின்னு நச்சுன்னு காட்டுறியே!.. ப்ரியாமணியை வர்ணிக்கும் ரசிகர்கள்…

0
463
priyamani

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ப்ரியாமணி. மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் கொண்டவர். நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் வாய்ப்பு தேடியவருக்கு முதல் படமே பாரதிராஜா இயக்கத்தில் அமைந்தது அதிர்ஷ்டம். கண்களால் கைது செய் என்கிற அந்த படத்தில் ப்ரியாமணி நன்றாகவே நடித்திருந்தார்.

priyamani

அதன்பின் சில படங்களில் நடித்தாலும் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் பெற்றார் ப்ரியாமணி. தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

priyamani

தமிழில் விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போனார். பெரிய நடிகர்களின் லிஸ்ட்டிலேயே நான் இல்லை என ஒருமுறை பேட்டியிலேயே புலம்பியிருந்தார். பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடித்த அது ஒரு கனா காலம் படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

priyamani

தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனதும் தெலுங்கு சினிமா பக்கம் சென்று தூக்கலான கவர்ச்சி காட்டி நடிக்க துவங்கினார். அப்படி இணையத்தில் வெளியான அவரின் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்தது. ஒருகட்டத்தில் திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் டிவி நிகழ்ச்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜ்ஜாக கலக்கினார்.

priyamani

இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியியிருக்கிறார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கட்டழகை நச்சென காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

priyamani

google news