தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் தாங்கள் எதிர்பார்த்தது போல் நடிகர்கள் நடிக்கவில்லை என்றால் கடுமையாக திட்டுவதுடன் சில இயக்குனர்கள் அடிக்கவும் செய்வார்கள். பல டாப் நடிகர் மற்றும் நடிகைகள் கூட இயக்குனர்களிடம் அடிவாங்கி உள்ளார்கள். அந்த வகையில் தேசிய விருது வென்ற நடிகை ஒருவர் பிரபல இயக்குனரிடம் அடிவாங்கி உள்ளாராம்.
அந்த நடிகை வேறு யாருமல்ல பருத்திவீரன் படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நடிகை பிரியாமணி தான். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் தமிழில் வெளியான கண்களால் கைது செய் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், மது, பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமான ப்ரியாமணி தற்போது சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியாமணி அவரின் முதல் படம் குறித்தும் இயக்குனர் பாரதிராஜா குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர் கூறியதாவது, நான் நடித்த முதல் படம் கண்களால் கைது செய். இந்த படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கி இருந்தார்.
ஆரம்பத்தில் நான் இந்த படத்தில் நடிக்க மிகவும் பயந்தேன். ஏனென்றால் பாரதிராஜா முன்கோபக்காரர். அவர் படம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். பெரிய நடிகையாக உள்ள ராதிகா, ராதா உட்பட பல நடிகைகளும் அவரிடம் அடி வாங்கியுள்ளார்கள். மேலும் அவர் அடித்தால் அதிஷ்டம் என்று கூறுவார்கள்.

ஆனால், நான் அவரிடம் அடி வாங்க கூடாது என நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக என்னையும் அவர் அடித்துள்ளார்” என கூறியுள்ளார். இப்போதான் தெரியுது நீங்க எப்படி தேசிய விருது வாங்குற அளவுக்கு திறமையா நடிச்சீங்கனு.
