சாப்பாட்டு ராணினு சொல்றது சரியாத்தான் இருக்கு...! அம்சமா உட்காந்து புகைப்படத்தை வெளியிட்ட நம்ம செல்லாக்குட்டி...
சாப்பாட்டு ராணி, செல்லாக்குட்டி, ஜீலி, என வித்தியாசமான செல்லப்பெயர்களால் மக்களால் அழைக்கப்படுபவர் நம்ம ஃபேவரைட் ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரது கலகலப்பான பேச்சால் அனைவரையும் எளிதில் கவரக்கூடியவர். இவரின் ஷோ இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் எந்தவொரு நிக்ழ்ச்சியும் நடைபெறாது.
ஷோவில் இருந்து எந்தவொரு விருது வழங்கும் விழா வரை இவரின் கலகலப்பான தொகுப்பால் நிகழ்ச்சிகள் எல்லாம் வெற்றியடைந்தது என கூறலாம். இவரும் கோ-ஆங்கர் மா.க.பா.ஆனந்தும் இணைந்து வந்தாலே ஸ்டேஜ்ல கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.
அந்த அளவுக்கு இவர்களுக்குள்ள இருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போகும். இவர் பிக்பாஸ் போனதுல இருந்து நிகழ்ச்சியில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் பிக்பாஸ் வீடு எந்நேரமும் சிரிப்புமயமாக இருந்தது இவரின் காமெடியால்.
கலாட்டா நக்ஷத்ரா டிவி-திரைப்பட விருதுகளில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சிறந்த பெண் தொகுப்பாளினிக்கான விருதை பிரியங்கா வென்றுள்ளார். இதுவரை இவரை ரீபிளேஸ் பண்ண யாரும் இல்லை. இவர் அடிக்கடி சமூக வலைதள்ங்களில் ரசிகர்களுடன் இணைப்பிலயே இருப்பார்.
இந்த நிலையில் தற்போது சில போட்டோசூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் சாப்பாட்டுக்கு முந்துவது போல நல்லா காலை மடக்கி உட்காந்து போஸ் கொடுத்துள்ளார்.