பிரியங்கா மோகனுக்கு பதிலா அந்த நடிகையா?!.. உனக்கு மனசாட்சி இருக்கா தல!.. தளபதி 68 பரபர அப்டேட்..

Published on: October 2, 2023
priyanka
---Advertisement---

Thalapthy 68: இப்போதெல்லாம் விஜய் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் பெரிய இடைவெளியே விடுவதில்லை. நடித்து முடித்துள்ள படம் வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ரெடியாகி விடுகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், விஜய் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். வெங்கட்பிரபு இயக்கும் இந்த படம் விஜயின் 68வது படமாகும். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பது ஏற்கனவே வெளிவந்த செய்திதான்.

இதையும் படிங்க: ஆடியோ லாஞ்ச் போனா என்ன!.. ரசிகர்களை சந்திக்க வரும் விஜய்!.. பெரிய சம்பவத்துக்கு ரெடியாகும் தளபதி…

இப்படம் முழுக்க முழுக்க குடும்ப கதையாக உருவாகவுள்ளது. அதனால்தான் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த் என பலரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இதில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா என பலரும் கலந்து கொண்டனர்.

முதலில் இந்த படத்தில் ஜோதிகா நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அவர் நடிக்க மறுக்கவே அவருக்கு பதில் சினேகா வந்தார். அதேபோல், இப்படத்தில் பிரியங்கா மோகன் நடிப்பதாக சொல்லபட்டது. ஆனால், இப்போது அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதில் கொலை படத்தில் நடித்த மீனாக்‌ஷி சௌத்ரி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: அப்பாவிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு போன விஜய்!.. கடைசியில் எங்கே இருந்தார் தெரியுமா?…

சிலரோ, பிரியங்கா மோகனும் இப்படத்தில் நடிக்கிறார் என சொல்லி வருகிறார்கள். அதேநேரம் இப்படத்தில் நடிகை லைலாவும் நடிக்கவுள்ளார் என்பது புதிய செய்தி. இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா மோகன் டாக்டர் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன்பின் எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருக்கிறார். தளபதி 68 படத்தில் இவர் இல்லை என்கிற செய்தி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: நம்ம நினைச்சத அவன் சொல்லிட்டான்… இதனால் தான் விஜய் கம்முனு இருக்காரா? அடடே!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.