பாத்திக்கிட்டே இருக்கலாம்!.. இந்த ரேஞ்சில போஸ் கொடுத்த மத்தவங்கலாம் காலி...
இந்திய நடிகை மற்றும் மாடல் பிரியங்கா அருள் மோகன். கர்நாடகாவை சேர்ந்த அம்மாவுக்கும், சென்னையை சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர். பிரியங்கா பள்ளி, கல்லூரி படிப்புகளை செனனியில்தான் முடித்தார். அவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.
கன்னட சினிமாவில்தான் முதன் முதலில் அவர் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் நானி ஹீரோவாக நடித்த கேங்லீடர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படம் மூலம் அவருக்கு தெலுங்கில் ரசிகர்கள் உண்டாகினர். இந்த படம் 2019ம் வருடம் வெளியானது. அதன்பின் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.
கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார். இப்படத்தில் மக்கு ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதோடு, யோகிபாபுவோடு சேர்ந்து ப்ளாக் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்கவும் வைத்தார்.
இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடித்தார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் மற்ற நடிகர்களை போல அழகான உடைகளை அணிந்து அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி அவர் க்யூட்டாக போஸ் கொடுத்து கிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.