தலைவிக்கு ஒரு தக்காளி சோறு பார்சல்... சகலகலா ஆட்டத்தை சட்டுபுட்டுனு ஆரம்பித்த பிரியங்கா!

விஜய் டிவியில் எதிர்பார்த்தது போன்று நேற்று முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மாடல் அழகி, பாடகி, யூடியூப் பிரபலம், ஆங்கர் , திருநங்கை என போட்டியாளர்கள் தேர்வு பாராட்டக்கூடிய வகையில் உள்ளது.

அந்த வகையில் இந்த சீசனில்

இசைவாணி
ராஜூ ஜெயமோகன்
மதுமிதா
அபிஷேக் ராஜன்
நமிதா மாரிமுத்து
பிரியங்கா
அபினய்
சின்னப்பொண்ணு
பவானி ரெட்டி
நதியா சங்
வருண்
இயக்கி பெர்ரி
இமான் அண்ணாச்சி
ஸ்ருதி பெரியசாமி
அக்சரா ரெட்டி
தாமிரா செல்வி
சிபி சந்திரன்
நிரூப் நந்தகுமார்.

priyanga

priyanga

இதில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படுவது பிரியங்காவின் நடவடிக்கை தான். நகைச்சுவையான பேச்சு, நன்றாக தெரிந்த முகம் என பிரபலமானவராக இருக்கும் ப்ரியங்கா பிக்பாஸில் வழக்கம் போலவே பஞ்ச் டயலாக்கில் பட்டய கிளப்புகிறார். நாங்க எல்லாம் ஒன்னானோம் கக்கூஸ் கழுவி Friend ஆனோம் என ராஜுவுக்கு ஆதரவாக பேசி பட்டய கிளம்பிவிட்டார்.

இந்த சீசனில் ராஜு மற்றும் பிரியக்காவின் கம்போ காமெடிகள் நிறைய இருக்கும் அது தான் நிகழ்ச்சியின் ஒரே சுவாரஸ்யமே. பிரியங்கா மட்டும் இல்லன்னா இந்த சீசனே இல்ல அந்த அளவுக்கு இறங்கிட்டாங்க. அடேய் பிக்பாஸ்... என் தலைவிக்கு நாலு வேலையும் நல்லா சோறு போடு அப்புறம் பாருங்க performanceஅ... என்ன நான் சொல்றது?

 

Related Articles

Next Story