உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்... அபிஷேக் பச்சன் போனில் இருந்து வந்த மெசேஜ்.... அதிர்ச்சியடைந்த நடிகை...!

by ராம் சுதன் |
abhishek bachchan
X

நடிகர் மற்றும் நடிகைகள் ஒருவருக்கொருவர் நட்பாக பழகுவதும், செல்லமாக சண்டையிடுவது குறும்புத் தனங்கள் செய்வது போன்றவை எல்லாம் வழக்கமாக நடக்கக்கூடிய சம்பவங்கள் தான். ஆனால் பிரபல நடிகை ஒருவர் இதுபோல் விளையாட்டாக செய்த சம்பவம் ஒன்று பிரச்சனையில் முடிந்துள்ளது.

priyanka chopra

priyanka chopra

அந்த நடிகை வேறு யாருமல்ல பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா தான். இவர் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா அங்கு முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் டிரண்டாகி வருகிறது. அந்த பேட்டியில் பிரியங்கா சோப்ரா பிரபல நடிகரின் போனை திருடிய சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி அந்த பேட்டியில் நடிகர் அபிஷேக் பச்சன் குறித்து பிரியங்கா சோப்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

preity zinta

preity zinta

அதற்கு பதிலளித்த பிரியங்கா, "அபிஷேக் mad. ஒரு முறை நான் அவர் போனை திருடினேன். ஆனால், அபிஷேக் தான் என்னுடைய போனை முதலில் திருடினார். அதற்கு பழிவாங்க தான் நான் அவருடைய போனை திருடினேன். பின் அந்த போனில் இருந்து I miss you where have been? You wanna என்று ஒரு நடிகைக்கு மெசேஜ் அனுப்பினேன்.

அந்த நடிகை வேறு யாருமல்ல ப்ரீத்தி ஜிந்தா தான். பின்னர் போனை வேனில் ஒளித்து வைத்து விட்டு நான் ஓடி விட்டேன். அந்த மெசேஜை பார்த்த ப்ரீத்தி ஜிந்தா அதிர்ச்சியாகி what is wrong with you என பதில் அனுப்பி இருக்கிறார்" என மிகவும் கூலாக பேசியுள்ளார். ஜஸ்ட் மிஸ் கொஞ்சம் விட்டிருந்தால் அபிஷேக் பெரிய பிரச்சனையில் மாட்டி இருப்பார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Next Story